search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மங்கை மான்விழி அம்புகள் விமர்சனம்"

    வினோ இயக்கத்தில் ப்ரித்வி விஜய் - மஹி நடிப்பில் வெளியாகி இருக்கும் `மங்கை மான்விழி அம்புகள்' படத்தின் விமர்சனம்.
    மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் நாயகன், ப்ரித்வி விஜய் அவருடன் படிக்கும் நாயகி மஹியை காதலித்து வருகிறார். மஹியிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். காதலை சொன்னால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலே இருக்கிறார். 

    இந்த நிலையில், ப்ரித்வி ஒரு விபத்தில் சிக்கி தனது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். மஹியை காதலித்ததையும் மறந்துவிட, கடைசியில் தனது காதலை மஹியிடம் சொன்னாரா? அவர்களது காதல் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 



    நாயகன் ப்ரித்வி விஜய் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார். மஹி அழகான பதுமையாக வந்து செல்கிறார். இருவருக்கிடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. 

    கல்லூரி காதல் பற்றி பல்வேறு படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஒரு கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் வினோ. புதுமையான காதல் காட்சிகள், காமெடி என சில இடங்களில் தொய்வுடன் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். 

    தமீம் அன்சாரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். தினேஷ் லக்‌ஷ்மணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `மங்கை மான்விழி அம்புகள்' கூர்மை.

    ×